Monday, November 30, 2009

"சினிமாவை பத்தி எதுவும் கேட்டுடாதீங்க"-அப்துல்கலாம்



அடிப்படை தத்துவம் அறிந்த தலைவர்

சென்னை அண்ணா பல்கலையில் சிறப்பு பேராசிரியராக டாக்டர் அப்துல்கலாம் பணியாற்றிக் கொண்டிருந்தார்.அவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் போகிற தகவல் கிடைத்ததும் அவரை பேட்டிகாண சென்றிருந்தேன். மலர் கொத்து கொடுத்து வாழ்த்து சொல்லிய பின் "பேட்டி வேண்டும்" என்றேன் . "நான் என்ன சார் பெரிசா சாதனை பண்ணிட்டேன் ..பேட்டி கேக்குறீங்களே ?" என தன்னடக்கமாக சொன்ன கலாம்
"
நீங்க பொலிடிக்கல் ரிபோர்டரா ?" என்று கேட்டார். "சினிமா நிருபர், ஆனால் உங்களை பேட்டி எடுக்கும் அசைன்மென்ட் என்னிடம் கொடுக்க பட்டிருக்கு!" என சொன்னேன். "சினிமாவை பத்தி எதுவும் கேட்டுடாதீங்க .அப்புறம் நான் திருதிருன்னு முழிச்சிருவேன்" என அவர் சொன்ன போது ,எல்லோருமே சிரித்துவிட்டோம். அவருக்கு வாழ்த்துச் சொல்ல நிறைய பேர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். வாழ்த்த வந்திருப்பது மாணவ மாணவிகள் என்று தெரிந்தால் உடனே அவர்களை தன் அருகே வரவைத்து அவர்களுடைய படிப்பு, எதிர்கால லட்சியம் என பல விஷயங்களை விசாரிக்க ஆரம்பித்து விடுவார். ஒரு தகப்பனைப் போல ஒவ்வொருவருக்கம் அட்வைஸ் செய்தார். இதில் ஆச்சரியப் படும்படியான விஷயம் என்னன்னா .......
சொன்ன அட்வைசையே சொல்லாமல் ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வோவோருவிதமாக அட்வைஸ் செய்தது தான்! மாணவர்கள் சரியான பாதையில் சென்றால் தேசம் சரியான பாதையில் செல்லும் என்கிற சூழ்நிலையால் அவரால் பேட்டிக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனாலும் கூட..
அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் சிறந்த மனிதரை சந்தித்த சந்தோஷம் மனதில் நிறைந்தது ! தலைமைப் பண்பிற்கான இலக்கணம் என்பது எளிமையும் , அடுத்தவர் மீதான அக்கறையும் தான் என்பதையும் அவரை பார்த்த பொது அறிய முடிந்தது."கனவுகள் எண்ணங்களை உருவாக்கும்! எண்ணங்களை செயல்களை உருவாக்கும் !

அகவே
கனவு காணுங்கள்" என்றார் கலாம். நானும் கனவு காண்கிறேன். என் கனவு முழுக்க அப்பழுக்கற்ற அப்துல்கலாம் முகம் வந்து கொண்டே இருக்கிறது .

நன்றி.-
நக்கீரன் 18-12-௨009


















No comments:

Post a Comment